Top News

சிரியா மீதான தாக்குதல் ஏகாதிபத்திய இராணுவ அடக்குமுறையின் மற்றுமொரு கொடூரமான கட்டம்!

Image result for syria war
இறையாண்மை கொண்ட நாடான சிரியா மீதான கொடூரமான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் சேர்ந்து சிரியாவில் இரசாயன ஆயுதம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைத்து சிரியா மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனை கண்டிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிகையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் அறிக்கைகளை உறுதிப்படுத்த கூட நேரம் வழங்கப்படாமல் சிரியா மீது உடனடியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டியுள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்கள் மற்றும் ஏனைய சர்வதேச விதிமுறைகளை மீறியே சிரியா மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிப்பாட்டுள்ளது.
“சிரியா மீதான தாக்குதலை நியாயப்படுத்துவதற்கு இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பில் ஒரு கதையைப் பயன்படுத்தினாலும், இந்த நகர்வானது பல தசாப்தங்களாக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளால் மேற்கொள்ளப்படும் அரசியல் மற்றும் இராணுவ ஆதிக்கத்தின் ஊடாக மத்திய கிழக்கு மற்றும் அது வழியாக எண்ணெய் இருப்பின் கட்டுப்பாட்டை கொண்டுவருவதற்கான நடவடிக்கை என்பது தெளிவானது.” என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியா மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, நாடுகளில் கைப்பொம்மை ஆட்சிகளை அமைப்பதன் ஊடாக நாடுகளை கைப்பற்றும் ஏகாதிபத்திய முயற்சிகளை தோற்கடிப்பதற்கு உலகெங்கிலுமுள்ள முற்போக்கான மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக, மக்கள் விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post