அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நில இழப்பீடுகள் குறித்து முஸ்லிம் தலைமைகள் பேசத்தயங்கும் இத்தருவாயில் பொதுத்தள சமூக செயற்பாட்டாளர்கள் சமூகத்தின் இருப்பு குறித்து சிந்திக்க முன்வந்துள்ளனர்,
அந்த அடிப்படையில் நீண்டகால பிரச்சினையாக இருக்கும் வட்டமடு விவசாயக்காணி மீட்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்த அக்கரைப்பற்றை சேர்ந்த சர்ஜூன் ஜமால்தீன், ஆசாத் ஆதம்லெவ்வை ஆகியோருக்கு வட்டமடு விவசாயிகள் சங்கம் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
சந்திப்பு குறித்து முகப்புத்தகத்தில் சர்ஜூன் ஒரு பதிவினை இட்டுள்ளார் அந்தப்பதிவு,
வட்டமடு விவசாயக் காணி விவகாரமாகும். வட்டமடு காணி தெடர்பான ஆவணத்தை அவரிடம் கையளித்து "அப்பிரதேசத்தில் முஸ்லிம் விவசாயிகள் விவாசயம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முயற்சி எடுக்க வேண்டும்" என்று வட்டமடு முஸ்லிம் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பிலும் வடக்கு கிழக்கில் காணிப் பங்கீடு தொடர்பிலும் குறிப்பிட்டோம். நாம் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அவர் தனது உதவியாளரை அழைத்து கோப்பொன்றினுள் எமது ஆவணங்களை வைத்ததுடன் 'தான் நாளை திருகோணமலைக்கு போவதாகவும் எம்மை மீண்டும் 20ம் திகதி அளவில் சந்திக்குமாறும்' குறிப்பிட்டார்.
வட்டமடு விவசாயக் காணி விவகாரம் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் மற்றும் வட்டமடு விவசாயிகள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மேலதிகமாக ஒரு சிறிய பங்கிளிப்பினை நாமும் வழங்க சந்தர்ப்பம் கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரின் முயற்சிகளும் வெற்றியளிக்க பிரார்த்திப்போம்.
Post a Comment