Top News

மத்ரஸாவின் கட்டிட நிர்மானப்பணிகள் இடைநிறுத்தம் - நீர்கொழும்பில் சம்பவம்


நீர்கொழும்பு முஸாதிக் முஜீப் 


நீர் கொழும்பு தளுபத பகுதியில் சுமார் 20 வருடத்திற்கு முன்னர் முஸ்லிம் நபரொருவரால் மத்ரஸாஅமைப்பதற்கு 6 பேர்ச்சஸ் காணி தளுபத பகுதி வாழ் முஸ்லிம் மக்களுக்கு அன்பளிக்கப்பட்டது.

இதன் பின்னர் இப் பகுதி மக்கள் நீர் கொழும்பு பெரிய பள்ளி வாசலின் உதவியுடன் சட்ட ரீதியான முறையில் இதனை இஸ்லாமிய சமய கலாச்சார திணைக்களத்தில் வக்ப் செய்யப்பட்டது.

இதன் பின்னர் கட்டுமானப்பணிகள்  ஆரம்பிக்கப்பட்டதையடுத்து சில அந்நிய சக்திகளினால் சுமார் 20 வருடங்களுக்கு முன்னரே இவை இடை நிறுத்தப்பட்டது.

காரணம் அப் பகுதியில் 80% மக்கள் சிங்களவர்களே....

ஆனால் 2014ம் ஆண்டு கணக்கெடுப்பு முதல் தற்பொழுது வரை 400 ற்கு மேற்பட்ட முஸ்லிம்  குடும்பங்கள் வாழ்கின்றனர்.இவர்களதும், இவர்களது பிள்ளைகளினதும் எதிர்கால நலன் கருதி இக் கட்டிடப் பகுதியின்  பணிகள் இன்று சனிக்கிழமை (14.04.2018)  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

ஆரம்பித்து சில வினாடிகளில் அந்நிய சக்திகளினால் பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன், சில அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு இவர்களின் தலையீட்டினால் இக் கட்டிட நிர்மானப்பணிகள் இடை நிறுத்தப்பட்டன.

இதன் பின்னர் இப் பகுதி மக்கள் நீர்  கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் தொடர்பு கொண்டனர்.இதன் போது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் இது சம்பத்தப்பட்ட உரிய அதிகாரிகளை சந்தித்து மீண்டும் இதனை கட்டுவதற்குறிய முயற்சிகளை செய்து தருவதாக நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் உறுதி மொழி அளித்துள்ளது.

எனினும் இதனை மீண்டும் கட்டத்துவங்கினால் இது போன்ற நிலைமை ஏற்படுமோ....? என்ற அச்சத்தில் அப் பகுதி மக்கள்   உள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post