திடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி!

NEWS


நாவலப்பிட்டி, தலவாக்கலை பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று கெட்டபுலா சந்தியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக  நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று (02.04.2018 )  மாலை  இடம்பெற்றுள்ளது.
வீதியால் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் தீடீரென  தீப்பிடிக்க  ஓட்டுனரும், பயணித்த மற்றொரு நபரும் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்துள்ளமையால் அவர்கள் இருவரும் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.
தீப் பிடித்த முச்சக்கரவண்டியை பிரதேசவாசிகள் இணைந்து  தீயை அணைக்க முயற்சித்த போதும் சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.
6/grid1/Political
To Top