Top News

நல்லாட்சி நாட்டுக்கு தேவையான ஆட்சியல்ல: பெங்கமுவே நாலக தேரர்

Image result for பெங்கமுவே நாலக தேரர்


நல்லாட்சி என்ற எண்ணக்கருவின் மூலம் நாட்டுக்கு தேவையான ஆட்சி நடைபெறாது என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் பிரதிநிதியான பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியே பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பெங்கமுவே நாலக தேரர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவான பிக்குகள் அணியில் அங்கம் வகிக்கும் மத குரு என்பதுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தீவிரமாக ஆதரித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நல்லாட்சி அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் காரணமாக ஜனாதிபதியே அதிகமாக அசௌகரியங்களுக்கு உள்ளானதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post