பன்னாட்டு அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகும்பட்சத்தில் ஈரான் அணு முகமை அதனால் ஏற்படும் எதிர்பார்த்த, எதிர்பாராத விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.
அரசுத் தொலைக்காட்சியில் அதிபர் ஹசன் ரூஹானி கூறும்போது, “எங்கள் அணுசக்தி அமைப்பு முழுதும் தயாராக இருக்கிறது. அதாவது எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத விளைவுகளுக்குத் தயாராகவே உள்ளது” என்றார்.
ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கும் வண்ணம் அமெரிக்கா மற்றும் பிற 5 உலக நாடுகளும் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டன.
ஆனால் இந்த ஒப்பந்தம் படுமோசமான ஒப்பந்தம் இதிலிருந்து அமெரிக்கா விலகும் என்று அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்திய வண்ணம் இருக்கிறார். இது குறித்து ஜனவரியில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அவர் கூறும்போது ஒப்பந்தத்தின் தவறுகளாக அமெரிக்கா சுட்டிக் காட்டுவதையும் அதை மாற்றவும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இல்லையெனில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான் பெற்ற பொருளாதார தடை விலக்கல்களை மறு பரிசீலனை செய்ய வேண்டி வரும் என்று எச்சரித்தார்.
ஈரான் அயலுறவு அமைச்சர் மொகமத் ஜாவேத் ஜாரிப் தொலைக்காட்சியில் அமெரிக்க மிரட்டல் குறித்துக் கூறும்போது, “அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகினால் ஈரானுக்கு வேறுபல தெரிவுகள் உள்ளன. ஆனால் அமெரிக்கா விலகினால் அதற்கான ஈரானின் எதிர்வினை அவ்வளவு விரும்பத் தகுந்ததாக இருக்காது” என்றார்.
Post a Comment