Top News

(O/L)யில் 9W - நான் என் வாழ்க்கையில் தோற்று விட்டேனா????



இன்றைய போட்டி நிறைந்த சூழலில் கல்வி அறிவு என்பது மிக முக்கியமான ஒரு சொத்தாக தோற்றம் அளிக்கின்றது. கல்வி கற்றவன் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் ஏனையவர்கள் வாழ்க்கையில் தோற்றுத்தான் போவார்கள் என்ற எண்ணப்பாடு நம்மிடையே மேலோங்கி நிற்கிறது.

குறிப்பாக பெற்றோர்கள் தன் பிள்ளை சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெறவில்லை என்றதும் அவன் ஏதோ அவன் வாழ்க்கையையே தோற்று விட்டு அவர்கள் முன் நிற்பது போல் நடந்து கொள்ளவும் தவறுவதில்லை. தன் பிள்ளை தோல்வியுற்றாலும் அவனை அடுத்த கட்டத்தினை நோக்கி நகர்த்தி செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களை சாருகின்றது.

முயற்சி செய்கின்ற எல்லோராலும் அதற்கான விளைவை உடனே அடைந்து கொள்ள முடிவதில்லை அது போலதான் மாணவர்களும் ஆனால் என்றோ ஒருநாள் நிச்சயமாக அவர்கள் அதற்கான பலனை அடைந்து கொள்வார்கள்.

சில மாணவர்கள் ஒரு விடயத்தினை ஒரே தடவையில் புரிந்து கொள்ளும் ஆற்றலினை கொண்டிருப்பர் இன்னும் சிலர் பல தடவைகள் சொன்னால் தான் புரிந்து கொள்வர். இன்னும் சிலர் எத்தனை முறை சொன்னாலும் அதை புரிந்து கொள்ளும் தன்மை அற்றவர்களாக இருப்பர். இப்படியான மாணவர்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனம் கண்டு அவர்களுக்கு பொருத்தமான துறைகளில் அவர்களை முயற்சி செய்ய தூண்ட வேண்டும்.

இன்று நாடலாவிய ரீதியில் பல பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு 13 வருட கட்டாய கல்வி திட்டம் எனும் தொனிப் பொருளின் கீழ் சாதாரண தரப் பரீட்சையில் 9W எடுத்த மாணவர்களுக்கும் உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தங்களுக்கு விரும்பிய தங்களால் இயலுமான துறைகளை தேர்வு செய்து உயர்தரப் படிப்பினை தொடர முடியும்.

எனவேதான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளோடு கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான துறைகளில் அவர்களை நுழையச் செய்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையினை வளப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

(சகல வசதிகளையும் உதாசீனம் செய்து முயற்சி செய்ய தவறும் மாணவர்கள் விடயத்தில் பெற்றோர்கள் அவர்களுக்கு உபதேசம் செய்வதை விட வேறு என்ன தான் செய்து விட முடியும்.)

Sameen Mohamed Saheeth
(B.Sc. Management (Valuation) - USJP)

Post a Comment

Previous Post Next Post