நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை மாத்திரம் ஒழிக்கும் வகையில் கொண்டு வரப்படும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை, கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு நேற்று விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
நாட்டிற்கு புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலைப்பாடுகள் இருந்து வரும் நிலையில், நிறைவேற்று அதிகாரத்தை மாத்திரம் ஒழிக்கும் வகையில் திருத்தச் சட்டத்தை கொண்டு வருவது ஏற்புடையதல்ல.
நாட்டின் தேசியப் பிரச்சினை உட்பட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையிலான முனைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குடிநீர் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment