ஈரானிய அணுசக்தி திட்டத்தில் ஈரானுக்கு அமெரிக்கா 12 நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி உடன்படிக்கை தொடர்பில், அமெரிக்கா தலையிட்டு புதிய உடன்பாடொன்றுக்கு வருவதாக இருந்தால், இந்த நிபந்தனைகளுக்கு ஈரான் உடன்பட வேண்டும் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் உடன்பாடொன்றை ஏற்படுத்திக் கொண்டன. இது கடந்த 2015 இல் இடம்பெற்றது. இதன்போது பராக் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார்.
தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டுள்ளார். அத்துடன், ஈரானுக்கு மீண்டும் பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை திணிப்பதற்கும் அமெரிக்கா தயாராகி வருகிறது.
அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகி இருந்தாலும், உடன்பாட்டில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Post a Comment