கூட்டரசின் அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு அலுவலகம், வாகன தேவைகளுக்காக நிதி கோரி குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படுமானால் மஹிந்த அணியான கூட்டு எதிரணியுடன் இணைந்து அதை எதிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில்,
பெரும்பாலான அமைச்சர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்களுக்கு அலுவலகங்கள், வாகன வசதிகள் இருக்கின்றபோதிலும் சிலருக்கு அந்த வசதிகள் இன்னும் உரியவகையில் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.
எனவே, அந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக அரசு குறைநிரப்புப் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கு உத்தேசித்துள்ளது.
அவ்வாறானதொரு யோசனை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதைக் கடுமையாக எதிர்ப்பதற்கும், வாக்கெடுப்பைக் கோரி தோற்கடிப்பதற்கும் பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சு.கவின் 16 உறுப்பினர்களும் முடிவெடுத்துள்ளனர்.
இதற்கு மஹிந்த அணியின் ஆதரவையும் அவர்கள் கோரியுள்ளனர். அதிருப்தி நிலையிலிருக்கும் ஐ.தே.கவின் உறுப்பினர்களுடனும் பேச்சு நடத்தி வருகின்றனர் என்றுள்ளது.
Post a Comment