ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் நவால்னி உட்பட சுமார் 1,600 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரஷிய அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே, பொதுமக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி வலியுறுத்தி வருகிறார்.
இந்த கருத்தை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுமாறு தனது கட்சியினரை அவர் கேட்டு கொண்டுள்ளார். மாஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை அருகே நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அலெக்சி நவல்னி-யை புஷ்கின்ஸ்கயா சதுக்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றனர்.
இந்நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புஷ்கின் சதுக்கத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 1,600 பேரை போலீசார் கைது செய்தனர்.
Post a Comment