
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்றைய கூட்டத் தொடரில் கடந்த காலத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்களும் இன்று முதல் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் உட்பட 16 பேரும் இன்று முதல் எதிரணியாக கடமையாற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (07) இரவு சகோதர மொழி தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.