பாறுக் ஷிஹான்
யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளை வக்பு சபை ஆகிய தரப்பினரின் உறக்கத்தினால் பள்ளிவாசல் ஒன்றின் நிலை இவ்வாறாக உள்ளது.
யாழ் மாவட்டத்தில் நகரை அண்டிய பகுதியில் உள்ள கோட்டை பள்ளிவாசல் தொழுகைக்கு பயன்படுத்தாமல் மூடிக்கிடப்பதும் அரசியல் விடயத்திற்கு மாத்திரம் பாவிப்பதும் தற்போது வழமையாகி விட்டது.
வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒல்லாந்தர் கோட்டைக்கு அருகில் உள்ள அமைந்துள்ள இப்பள்ளிவாசல் தொடர்பாக பொறுப்பு கூற வேண்டிய அமைப்போ எது தரப்போ வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இப்பள்ளிவாசல் மூடி திறப்பதை தன்னை மௌலவி என கூறும் ஒருவராவார்.இவர் திடிரென பள்ளியில் தோன்றி திடிரென மறைந்து போவார்.அயலவர்களான சகோதர இனத்தவர்கள் தான் இப்பள்ளிவாசலின் சொத்துக்களை பாதுகாப்பதும் அவற்றை அனுபவிப்பதுமாகும்.
இப்பள்ளிவவாசலுக்கென நியமிக்கப்பட்டதாக கூறப்பட்ட மௌலவி பள்ளிவாசலை பராமரிப்பதை விடுத்து வேறு வியாபாரத்தை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் யாழ் கிளிநொச்சி உலமா கிளை சபை இந்த பள்ளிவாசல் திறப்பது குறித்து எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது என கூறப்பட்ட போதிலும் இப்பள்ளிவாசலை யார் தான் திறப்பது அல்லது பராமரிப்பது என் கேள்வி எழுகின்றது.
கடந்த காலங்களில் இப்பள்ளிவாசல் யாழ் முஸ்லீம்கள் சிலரினால் பராமரிக்கப்பட்ட நிலையில் திடிரென கைவிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இப்பள்ளிவாசலலுக்கு நிரந்திர மௌலவி ஒருவரோ நிர்வாகமோ இயங்குவதாக தற்போது தெரியவில்லை.
இப்பள்ளிவாசல் கடந்த கால யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள தனவந்தரினால் புனரமைக்கப்பட்டு சிறிது காலம் இயங்கி வந்தது.
எனினும் தற்போது சில நபர்களின் சுயநலத்தினால் தினமும் முடப்பட்டு காணப்படுகிறது.
எனினும் தினமும் பள்ளிவாசல் அருகே உள்ள கோட்டையை பார்வையிட வெளிமாவட்ட பிரயாணிகள் வருகை தருகின்றனர். நோன்பு காலமாகையினால்
இவர்கள் தொழுவதற்கு சிரமங்களை எதிர்கொள்வதை காண முடிகின்றது.
இப்பள்ளிவாசல் மீள இயங்க வைப்பது யார் பொறுப்பு?
Post a Comment