வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழிகாட்டல் ஆலோனை ஆசிரியர் வெற்றிடத்திற்கு வழங்கப்படவுள்ள நியமனத்தில், சில சிக்கல்கள் உள்ளதாக உளவியல்பாட பட்டதாரிகள் தெரிவித்தனர்.
நாளை 02.05.2018ல் நடைபெறவிருக்கின்ற நேர்முகத் தேர்வில் “வேறு வகையான பாடத்தினை நியமனமாகக் கொண்ட,
வேறுபாடங்களை பட்டப்படிப்பாகப் படித்து வெளியேறி தற்போது கடமையாற்றிக்கொண்டிருக்கின்ற ஆசிரியர்கள், வழிகாட்டல் ஆலோசனை பாட ஆசிரியர்களாக மாற்றம் செய்வதற்கு அழைக்கப்படவிருக்கின்றார்கள்.
குறிப்பாக கடந்த ஆண்டில்(2017) இத்துறைசார் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் முன்னுரிமை அடிப்படையில் உளவியல் பட்டதாரி மாணவர்களே அதிகம் உள்வாங்கப்பட்டார்கள்.
இதனை உறுதி செய்வதாய் கல்வித்திணைக்களத்தின் அன்றைய சுற்றறிக்கை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் ஏனைய துறைசார்ந்த பட்டதாரி மாணவர்களைப் புறந்தள்ளுவது இதன் நோக்கமல்ல.
என்றாலும் தற்காலத்திற்குப் பொருத்தமாக உளவியல் பாடத்தினைப் பிரதான பாடமாகக் கற்று வெளியேறிய பட்டதாரிகளே மேற்படி நியமனத்திற்குத் தகுதியானவர்களாகவும், சரியானவர்களாகவும் இருப்பார்கள் என்பதுடன்,வழிகாட்டல் ஆலோசனை தொடர்பாக அடிப்படை அறிவைப் பெற்றவர்களாகவும் இவர்கள் காணப்படுகின்றார்கள்
மாறாக, காலத்திற்கேற்ப மாறுபட்ட வகையில் உள்வாங்கப்படுகின்ற நியமனங்களுக்குப்பின்னால் அரசியலும், சமூகச்செல்வாக்கும், குறுகிய இலாபமும், தம்மைத் தக்கவைத்துக் கொள்ளுதலும் இருந்து வருகின்றன.என்ற குற்றச்சாட்டினையும் முன்வைக்கின்றார்கள்.
பாறுக் சிஹான்
Post a Comment