Top News

இலங்கையில் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா ஒத்துழைப்பு!

Related image

இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
கியூபாவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜிதசேனாரத்னவை சந்தித்த கியூபாவின் சுகாதார அமைச்சர் ரொபேற்றோ மொராலே இதனைத் தெரிவித்துள்ளார்.
கியூபாவில் உற்பத்தி செய்யப்படும் ஒளடதங்கள், உபகரணங்களை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கும் இரு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post