ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அந்த தேர்தல் குறித்து அரசாங்கம் அறிவிக்கும் வரையில் தான் எதிர்பார்த்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுவது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எந்தவித முன்னெடுப்புக்களுக்கும் வந்திராத நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவிக்கத் தேவையில்லை. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை வெளியிட்டால், எமது வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment