தென் ஆப்பிக்க நாடான காங்கோவில் மீண்டும் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய் தாக்கத்தினால் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக உலக சுகாதார நிலையம் அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் 1976-ம் ஆண்டுகளில் இருந்து கொடூரமான நோயாக கருதப்பட்டது எபோலா என்னும் உயிர்கொல்லி நோய். இந்த வைரசின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா நோய் பரவி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டில் இறந்த 21 பேரின் உடலை சோதனை செய்து பார்த்ததில் எபோலா வைரஸ் பரவி வருகிறது என உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும் எபோலா நோய் பரவ தொடங்கி உள்ளதால் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
எபோலா கிருமியினால் இந்நோய் உண்டாக்கப்படுகிறது. குறிப்பாக கிருமித் தொற்று ஏற்பட்ட இரண்டு நாட்களில் காய்ச்சல், கரகரப்பான தொண்டை, தசை வலிகள் (மற்றும் தலைவலி ஆகியவற்றுடன் அடையாளங்கள் ஆரம்பிக்கின்றன. குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடு குறைந்து போனதைத் தொடர்ந்து வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த நிலையில் சிலருக்கு ரத்தக்கசிவு பிரச்சனைகள் துவங்குகின்றன.
இந்தக் கிருமியானது தொற்று ஏற்பட்டுள்ள ஒரு விலங்கின் ரத்தம் அல்லது உடல் திரவங்களால் பரப்படுகிறது. பழம் தின்னும் வௌவால்கள் கிருமியைக் பரப்புவதாக கூறப்படுகிறது.
இதற்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். முறையான சிகிச்சை மூலம் நோயாளியை சில நாட்கள் உயிர் வாழ வைக்கலாம் என கூறப்படுகிறது.
Post a Comment