தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டார் சபாநாயகர்!

NEWS
0
Image result for சபாநாயகர் கரு ஜயசூரிய

கலைக்கப்பட்டுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்தவது குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த வாரத்தில் முடிவொன்றை பெற்றுத்தருவதாக பிரதமர் தம்மிடம் கூறியுள்ளார் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில், இன்றுவரை தேர்தல் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாதுள்ளமை குறித்து மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரிடம் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் வழங்கியபோதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top