எம்பிலிபிடிய நகர சபை நிர்வாகம், நகரில் மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இத்தீர்மானத்துக்கு எதிராக இப்பகுதி பிக்குகள் அமைப்பினர் போர்கொடி தூக்கியுள்ளனர்.
பெளத்தர்கள் 99% வாழும் எம்பிலிபிட்டிய நகர சபை வளவுக்குள் இவ்விடயத்துக்கு அனுமதி வழங்கியதை அடுத்து இந்நிலமை உருவாகியுள்ளது.
நகரசபையின் இந் ஏகோபித்த தீர்மானத்தை அடுத்து நகர பொத்துச்சந்தையில் மீன் வியாபாரம் செய்து வரும் ஒருவருக்கு மாட்டிறைச்சியை பொதி செய்து விற்பனை செய்ய நகர சபயினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டிய நகரடபையின் கடந்த நிர்வாகத்தின் இதற்கான அனுமதி கேக்கப்பட்டபோதும் அதன் பின்னர் இதன் அதிகாரம் ஒரு ஆணையாளரின் கீழ் வந்த போதும் கூட இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
எனினும் இம்முறை இந்நகர சபையின் அதிகாரத்தில் உள்ள பொதுஜன பெரமுனவின் 8 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் 3 உறுப்பினர்கள் உட்பட 14 உறுப்பினர்களும் கடந்த நகர சபை அதிகாரத்தில் இருக்கும் பொது இதற்கு எதிர்ப்பு காட்டிய அனைத்து உறுப்பினர்களும் தற்போது மாடிறைச்சி விற்பனைக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் விசேட ஒரு நிகழ்வாகும்.
சுப்பர் மாக்கட்டில் மாட்டிறைச்சி விற்பனைக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாலும் இதன் மூலம் நகர சபைக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதாலும் மாட்டிறைச்சியை விற்பதில் தவறில்லை என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இந்த நடவடிக்கைக்கு முற்றாக எதிர்ப்பு தெரிவித்து வரும் பிக்குமார் இம்முயற்சியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்விடயத்தில் ஜாதிக ஹெல உரிமையின் முன்னால் தலைவர் சோபித தேரர் இந்நகரசபையின் முன்னால் தலைவர் வேவல் தெனியே பிரப தேரர் தலமையிலான பிக்குகள் அமைப்பினர் கடும் எதிப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment