ஹஸ்பர் ஏ ஹலீம்
நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமனத்தின் போது திருகோணமலை மாவட்டத்தில் எவருக்கும் எந்த கட்சியை சார்ந்தவருக்கும் ஆளும் தரப்பில் உள்ளவர்களுக்கோ அமைச்சரவை மாற்றங்களின் போது அமைச்சர்கள் நியமனம் வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க பாடுபட்ட மாவட்டங்களில் திருகோணமலை மாவட்டமும் சிறந்த உதாரணமாக காணப்படுகிறது.திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவர் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்களாவர் அவர்களில் ஒருவர் ஆளூம் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாணத்திலேயே ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் மற்றொருவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டதும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராகவும் நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட முன்னால் இரு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்,இன்னொரு பிரதிநிதி ஆளும் கட்சியின் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் முன்னால் போக்குவரத்து பிரதியமைச்சராகவும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.இவ் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் அங்கத்துவம் வகித்து வருகின்றார்கள்.
இருந்த போதிலும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பிரதியமைச்சரோ ,இராஜாங்க அமைச்சரோ நியமனம் செய்யப்படாததால் அபிவிருத்திகளிலும் நல்லாட்சி அரசாங்கம் மக்களையும் மாவட்டத்தையும் புறக்கணிப்பு செய்யப்படலாம் என்கின்ற மனோ நிலை மக்கள் மத்தியிலும் தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகவும் வைரலாகவும் பரவி வருகிறது.திருகோணமலை மாவட்டத்தில் இருந்த பொது நிருவாக பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே எதிரணிக்கு மாறிய போது அவரது அமைச்சு பறித்தெடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகளில் யாருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை என்பதால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் அமைச்சர்கள் இருவரும் மட்டக்களப்பில் புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மூன்று பிரதி இராஜாங்க அமைச்சர்களும் காணப்படுகின்றபோதிலும் திருகோணமலையில் ஒருவர் கூட அமைச்சுப் பதவிக்கு நியமனம் செய்யப்படவில்லை என்பது ஏன் என மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றனர்.அமைச்சரவை மாற்றத்தினால் தற்போதை நிலையையினால் மாவட்ட மக்கள் குழப்பமடைந்துள்ளனர் ஏன்?மூன்று பேரில் ஒருவருக்காவது வழங்கியிருக்கலாமே என மக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் மூவின சமூகத்தையும் கொண்டு காணப்படுகிறது இங்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகிறது காணிப் பிரச்சினை,மீள்குடியேற்றம்,கடல் தொழில்,சுகாதாரம் என இன்னோரன்ன பிரச்சினைகள் சமூகத்தில் காணப்படுகிறது இதற்கான முடிவுகளை இன்னும் மக்களுக்கு வழங்க முடியாதுள்ளது எதிர்க் கட்சி தலைமை கூட திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரொருவர் இருந்தபோதிலும் சமூக நலனுக்கான விடயங்கள் அபிவிருத்திகளில் புறக்கணிப்பு ஏற்படுவது அதை விடுத்து அமைச்சரவை மாற்றத்தின்போது புறக்கணிக்கப்படுவது பெரும் வேதனையளிப்பதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
மூன்று மும்மூர்த்தி ஆளுந்தரப்புக்களை சேர்ந்தவர்களில் இவர்களுக்கு அமைச்சுப் பதவிள் வழங்காமைக்கான காரணங்கள் என்ன இவர்களுக்கான தகுதி நிலை போதாமையா அல்லது கட்சிக்குள் முரண்பாடுகளா என்ன என்பதை நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் இவ்வாறாக தொடர்ந்தும் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு வருமாக இருந்தால் அடுத்து வரும் மாகாண சபை தேர்தல்களிலோ அல்லது மாற்று வழிகளை பயன்படுத்தியோ மக்கள் நல்லதொரு பாடத்தை புகட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறா ன நிலையை மாற்றுவதற்கு திருகோணமலை மாவட்ட மக்களை மக்களின் நிலையை கடந்த கால யுத்த சூழ்நிலைகளை அனர்த்த பாதிப்புக்களை கொண்டு நல்லாட்சி அரசாங்கம் மூவரில் ஒரு பிரதிநிதிக்காவது குறைந்தளவு அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.இவ் விடயமாக பிரதமர் தலைமையின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் காணப்படுகிறார் இவரையாவது பிரதமரின் கண்ணுக்கு தென்படவில்லையா?
எனவே நல்லாட்சியின் இவ் மூன்றாவது அமைச்சரவை மாற்றத்தில் தொடர்ந்த புறக்கணிப்பு இனி எப்போது மீள் மாற்றம் செய்யப்படுகிறதோ தெரியவில்லை மக்களுடைய பிரச்சினைகள் இதனால் புறக்கணிப்பு செய்யப்படலாம் நல்லாட்சியின் நீண்ட ஆயுள் நிலைத்திருக்கும் என்பது பற்றி சிந்திக்கும் போது கவலையளிக்கிறது.
Post a Comment