ஐக்கிய தேசியக் கட்சி என் மீது தாக்குதல் நடத்துகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி என் மீது சில சில தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது. நாட்டுக்காக எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 உறுப்பினர்கள் மீதும் எனக்கு நம்பிக்கையுண்டு.
கட்சியை வலுப்படுத்திக் கொண்டு முன்னோக்கி நகர்வதற்கு 16 உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்க உள்ளதாகவும் குறித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு ஜனாதிபதி எவ்வாறான பதில் ஒன்றை அளித்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
Post a Comment