Top News

தொழிலாளர்கள் உரிமை ஒவ்வொன்றாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது!


Image result for மஹிந்த
எவ்வாறெல்லாம் திருத்தங்கள் செய்தாலும் தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் மூத்த அரசியவாதியான டி.பி.இளங்ககோனின் உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்களுக்கு இருந்த மே தினத்தை இல்லாது செய்திருப்பதாகவும், எவ்வாறான காரணங்கள் இருந்த போதிலும் தனியார் துறையினருக்கு விடுமுறைய வழங்கியிருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
தொழிலாளர்களுக்கு இருக்கின்ற உரிமைகள் ஒவ்வொன்றாக விழுங்கப்பட்டுக் கொண்டிருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post