தென் இலங்கையின் முதல்த்தர தமிழ் குறுந்திரைப்பட கூட்டுத்தபனமான Mass Media தனது 4வது குறுந்திரைப்படமான “பாரி”யை 12.05.2018காலை 06.30 மணிக்கு வெளியிட்டது.
நாட்டுகாக போராடிய ஓர் இராணுவவீரன் தனது மகனை வளர்க்க போராடுகின்ற ஓர் போராட்டமே இக்கதையின் கருவாக அமைந்துள்ளது. அதாவது இன்று சமூகத்தில் போதைப்பொருள் பாவனை இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இன்று கைத்தொலைபேசி பாவனை, வீட்டில் தனிமையில் இருத்தல், பெற்றோர் தீர வீசரிக்காமல் பணத்தை பிள்ளைகளுக்கு வழங்குதல் என்பன இந்த தீய பழக்கம் மாணவர்களிடம் பரவ காரணமாக உள்ளது. இவற்றை எடுத்துக் கட்டும் விதமாக இக்கதை தயாரிக்கப்ட்டுள்ளது.
வில்பிட்ட காடு அதனை அண்டிய குளம் மற்றும் கொடபிடிய கிராமத்தின் எழில்மிகு வயல் மற்றும் மலைப்பகுதிகளில் இக்கதையின் ஒளிப்பதிவு இடம்பெற்றது.
சிமாஸ் ஹுஸைனின் இயக்கத்தில் இடம்பெறும் இக்கதையை பஸில் ஹுஸைன் எழுதியுள்ளார். மேலும் முஹம்மத் முன்ஸிப், சிமாஸ் ஹுஸைன் ஆகியோர் இக்கதையின் ஒளிப்பதிவாளர்களாக (Camera Man) தொழிற்படுகின்றனர்.
முஹம்மத் பாரிக், அப்துல் வாஹித், அப்துல் அஸீஸ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் அதேவேளை துணைக் கதாப்பாத்திரங்களில் முன்ஸிப், சிமாஸ் , பஸில் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்னு அஸாட்
Post a Comment