கட்டிட வேலைகள் முழுமையாக பூர்த்தியடைந்தும் திறக்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படும் கிண்ணியா பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம்
கிண்ணியா பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் முழுமையாக பூர்த்தியடைந்தும் இது வரை திறக்கப்படாமை கால இழுத்தடிப்பு செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டிடம் கடந்த மூன்று காலத்துக்கு முன்பு பூர்த்தியடைந்தும் இற்றை வரை திறக்கப்படாமையும் இதனால் பழைய சிறிய கட்டிடத்தினும் பிரதேச செயலகம் பல இடவசதி நெருக்கடிக்குள் இயங்கி வருவதாகவும் இதனால் தங்கள் உரிய அதிகாரிகளின் பெயர் நுழைவாயில்களை கண்டு பிடிப்பதில்பாரிய சிக்கல்கள் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மார்ச் மாதம் நடுப்பகுதியில் புதிய பிரதேச செயலக கட்டிடம் திறக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தபோதிலும் இது வரைக்கும் திறக்கப்படவில்லை என மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.உரிய அதிகாரிகள் இப் புதிய கட்டிடத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஹஸ்பர் ஏ ஹலீம்
Post a Comment