Top News

கண்டியை சேர்ந்த முஸ்லி்ம் பெண் லண்டனில் மேயராக தெரிவு; குவியும் வாழ்த்துக்கள்


பிரித்தானியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட பெண் ஒருவர் மேயராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

லண்டனில் ஹாரோ பகுதியின் மேயராக கரீமா மரிக்கார் (Kareema Marikar) என்ற பெண் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கரீமா மரிக்கார் லண்டனிலுள்ள பல தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அவர் சமூக சேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்த ஒருவராகும்.

இலங்கையர்களிடம் மாத்திரமின்றி மேற்கு ஹாரே மக்கள் மத்தியிலும் பிரபல்யமடைந்த ஒருவராக கரீமா மரிக்கார் காணப்படுகின்றார்.
அவரது பதவி பிரமாண நிகழ்வில் லண்டனில் வாழும் பெருமளவு இலங்கையர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஹாரோ நகர மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் மூன்று பிள்ளைகளை வளர்க்கும் தனது தாய் என்ற ரீதியிலும் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து பெருமை அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் பிறந்து வளர்ந்த கரீமா, கண்டி மகளிர் பாடசாலையின் பழைய மாணவியாகும். பின்னர் 28 வருடங்களாக லண்டன் ஹாரோ பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார்.
கடந்த காலங்களில் ஹாரோ நகர சபையின் லேபர் கட்சி உறுப்பினராக கரீமா பாரிய சேவையை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post