பைஷல் இஸ்மாயில்
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) மே தின விழா இன்று (07) திங்கட்கிழமை ஒன்றியத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
இந்த மே தின விழாவில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து ஊடகவியலாளர்களும் பங்கேற்ற இந்த விழாவில் அக்கரைப்பற்று மாநக பிரதி முதல்வர் அஸ்மி அப்துல் கபூர், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் முஹம்மட் அனீஸ் உள்ளிட பலர் இதில் கலந்துகொண்டு அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் பேரணியாக அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தை வந்தடைந்தது.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மே தினக் கூட்டம் “ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்வோம்”; எனும் தொனிப் பொருளில் கொண்டாடப்பட்டது.
இந்த மே தின ஊர்வலம் மற்றும் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சமுக மட்டத் தலைவர்கள், பொது நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த மே தினக் கூட்டத்தில் மூத்த இலக்கியவாதியும், கவிஞரும், எழுத்தாளருமான ஆசுகவி அன்புடீன் மற்றும் சுல்பிக்கா செரீப் ஆகியோரின் ஊடகப் பணியின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சினனம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment