(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பிரபல எழுத்தாளரும் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவருமான ஏ. எம். நஹியா எழுதிய இலங்கையில் முஸ்லிம் கல்விஷாபி மரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும் என்ற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 12ஆம் திகதி மாலை 3.45 மணிக்கு கொழும்புசாஹிராக் கல்லூரி கபூர் மண்டபத்தில் நடைபெறும்.
கொழும்பு சாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் அகில இலங்கை கல்வி மாநாட்டின் தவிசாளருமான மர்ஹும் எஸ்.எல்.எம்.ஷாபிமரிக்காரின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கி இலங்கை முஸ்லிம்களின் கல்வி பற்றி எழுதப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டு விழாவைஅகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடும் சாஹிராக் கல்லூரி 90 ஆவது அணியினரும் ஏற்பாடு செய்துள்ளனர்.
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவர் பேராசிரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்மாயில் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்பும் கௌரவ அதிதிகளாக வட மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரனும், பொதுச் சேவைஆணைக்குழுவின் தலைவர் டி. திசாநாயக்கவும் கலந்து கொள்வர்.
நூலின் முதல் மூன்று பிரதிகளை முறையே தொழில்அதிபர் முஸ்லிம் சலாஹுதீன், ஏ. பி. அப்துல் கையூம், ஹாபிஸ் யாஸீன் ஆகியோர் பெற்றுக்கொள்வர்.
பேராசிரியர் ஏ.ஜி.ஹுஸைன் இஸ்மாயில், முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஏ. எல். எம். அதாஉல்லாஹ், சாஹிராக்கல்லூரி ஆளுநர் சபைத் தலைவர் பௌசுல் ஹமீத், அதிபர் ரிஸ்வி மரிக்கார், ஆளுநர் சபை உறுப்பினர் முன்ஸிப் ஹுஸைன் ஆகியோரும்உரையாற்றவுள்ளனர்.
நூல் விமர்சனத்தை அரச மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் வித்தியாநிதி எஸ். சந்திசேகரன் நிகழ்த்தவுள்ளார்.
Post a Comment