Top News

கிண்ணியா நகர சபை தவிசாளரினால் 03 நூலகங்களிலும் தினக்குரல் பத்திரிகைக்கு தடை!

Image result for தினக்குரல் பத்திரிகை இனவாதம்


ஹஸ்பர் ஏ ஹலீம்


கிண்ணியா நகர சபை தவிசாளரினால் தமது சபைக்குட்பட்ட மூன்று நூலகங்களிலும் தினக்குரல் பத்திரிகை இன்றிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது.


தினக்குரல் பத்திரிகையில் இனவாதத்தை ஏற்படுத்தும் வகையில் பிரசுரம் அமையப்பெற்றதன் காரணமாக இதுவரை அதற்குரிய எந்த மறுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் காரணமாக கிண்ணியா பொது நூலகம், ஆலங்கேணி பொது நூலகம், மற்றும் மஹ்ரூப் நகர் வாசிகசாலைகளில் இன்றிலிருந்து தினக்குரல் பத்திரகை தடை செய்யப்பட்டுள்ளது.

என கிண்ணியா நகர சபை நேற்று (02) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தெரிவித்தார்

Post a Comment

Previous Post Next Post