வடகொரிய அதிபர் கிம் மற்றம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இடையிலான சந்திப்பு இடம்பெறுவது சந்தேகத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது.
சில வாரங்களுக்கு முன் வரை இரு தரப்பும் யுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததோடு தமது அணு ஆயுத வல்லமையை வடகொரியா நிரூபித்ததையடுத்து பேச்சுவார்த்தையே தெரிவாக மாறியிருந்தது.
எனினும், லிபியாவைக் கையாண்டது போன்ற திட்டமொன்றே வடகொரியா விடயத்திலும் அமெரிக்காவிடம் இருப்பதாக அந்நாட்டின் இராஜாங்க செயலாளர் தெரிவித்ததையடுத்து வடகொரியா பின் வாங்க ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவுடன் ஒத்துழைக்க ஆரம்பித்திருந்த லிபிய அதிபர் கடாபி, பின் அமெரிக்கா மற்றும் மேற்குலக அனுசரணையில் இயங்கிய கிளர்ச்சிக் குழுக்களால் கொல்லப்பட்டிருந்தார். இந்நிலையில், அணு ஆயுத குறைப்பு எனும் போர்வையில் அமெரிக்காவின் சதித் திட்டங்களுக்கு அடிபணியப் போவதில்லையென வடகொரியா மீண்டும் சூளுரைத்துள்ளதுடன் தற்போது சந்திப்பு சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment