எந்தவொரு அரசியல் கட்சியும் தமது அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் இராணுவத்தினரைப் பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய எந்தவொரு இராணுவத்தினருக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். தற்போதைய அரசாங்கம் சர்வதேச உதவியுடன் இராணுவத்தினரின் அபிமானத்தைப் பாதுகாக்க முன்னின்று உழைத்து வருகின்றது.
மின்சாரக் கதிரை, சர்வதேச நீதிமன்றம், இராணுவத்தினருக்கு எதிரான விசாரணை என்பவற்றை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
குற்றம் செய்த இராணுவத்தினர் கைது செய்யப்படுவது இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கை அல்ல எனவும் “வயம்ப ரண அபிமன்” நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
Post a Comment