இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு என்ற தகவலின் பின்னர்.
சம்மாந்துறையில் ஒரே நேரத்தில் அனைத்து எரி பொருள் நிறப்பு நிலையங்களிலும் எரிபொருள் தீர்ந்த உலக மகா அதிசயம்.
பதுக்கல் வியாபாரம் கூடாது!
சில வியாபாரிகள் தங்களின் லாபத்தை பெறுக்குவதற்கு கையாளும் வழிமுறை வியாபாரப் பொருளை பதுக்கல் செய்தல். மக்களுக்குத் தேவையான பொருளை உரிய நேரத்தில் மார்க்கெட்டிற்கு கொண்டு வராமல் பதுக்கி வைத்துவிட்டு, விலை ஏறும்போது மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து அதிக விலையில் விற்று லாபம் அடைகிறார்கள். இந்த பதுக்கல் தன்மை மனிதனை இரக்கமற்றவனாக மாற்றிவிடும். பதுக்கல் செய்தவன் சாபத்திற்கு ஆளாகக் கூடியவன் என்று இஸ்லாம் கூறுகிறது.
இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என்று கூறினார்கள். (உமர் (ரலி) இப்னுமாஜா).
அக்றம் முஹம்மட்.
Post a Comment