ஜனாதிபதி நாளை ஈரான் விஜயம்!

NEWS
0
Image result for maithiri
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (12) ஈரான் செல்லவுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானியின் உத்தியோகபுர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரான் செல்லவுள்ளார்.
இலங்கையுடனான பொருளாதார, வர்த்தக தொடர்புகளை பலப்படுத்துவது மற்றும் ஈரான் முதலீடுகளை இலங்கையில் அதிகரிப்பது என்பன குறித்து ஜனாதிபதியின் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஈரான் ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம்( 13 ) இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top