இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு ஊடகமின்றி தவித்த பொழுதும், தமிழ் பேசும் தமிழ் முஸ்லிம்கள் தங்கள் அடையாளங்களை வெளியுலகிற்கு வெளிக்காட்ட முடியாமல் ஏங்கிய பொழுதும் கை கொடுத்தது சக்தி என்றால் யாரும் அதனை மறுக்க முடியாது என அபர்ணா சுதன் குறிப்பிட்டுள்ளார்,
அவர் மேலும் குறிப்பிடுகையில்
தமிழ், முஸ்லிம் இளைஞர்களின் ஊடகக் கனவை தேசிய வானொலிகள், தொலைக்காட்சிகள் ஏற்க மறுத்த பொழுது கை கொடுத்தது சக்தி, இதற்கு உதாரணபுருசர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் இன்று அதனை மறந்து பலர் சமூக வலையில் பேசுகையில் மனம் கவலையளிக்கிறது.
சக்தி என்பது தமிழ் பேசும் மக்களின் சக்தி, நாங்கள் இப்தார் - சஹர் நிகழ்ச்சிகளுக்கு பல இலட்சம் செலவு செய்கிறோம், நாடு முழுவதிலும் 30 பள்ளிவாசல்களில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வுகளை செய்கிறோம் இது நன்மையான காரியம், அது மாத்திரமின்றி இஸ்லாமிய போட்டிகள் உம்றா பயணங்கள் என்று ஏராளம். இது பெருமைக்காக சொல்வதில்லை, ஏதோ ஒரு சில விசமிகள் சொல்லும் கதைகளை நம்பி சிலர் (ஊடகம் பற்றியறியாத) சக்தி பற்றி தவறாக எழுதுகின்றனர்.
சக்தி எப்.எம் முஸ்லிம்களுக்கு செய்த அரசியல், சமூக, மார்க்க சேவைகளை பட்டியிட்டால் ஆயிரம் செய்திகள் எழுத முடியும்., அதனை சொல்ல வேண்டிய தேவையில்லை அதனை மக்கள் அறிவர்.
ஊடகத்தில் செய்திளை வெளியிடுவதில், அரசின் மிகப்பெரும் கட்டுபாடு இருக்கிறது, அத்தோ பாதுகாப்பு தொடர்பில் கரிசனை எடுத்தே அதனை வெளியிட வேண்டும். பேஸ்புக் தளத்தில் பதிவது போல சொல்லிவிட முடியாது, ஒரு கட்டத்தில் பேஸ்புக்கும் முடக்கப்பட்டது அதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
அன்றும் இன்றும் என்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் ஊடக சக்தியாக நாங்கள் இருப்போம், எத்தனை தடைகள் வரினும் என்றும் நாங்கள் உங்களுக்காக...
Post a Comment