வறிய மக்கள் உணர முடியாத பொருளாதார வளர்ச்சியினால் எந்த பயனுமில்லை!

NEWS
0
Image result for சஜித் பிரேமதாச

வறிய மக்கள் உணர முடியாத பொருளாதார வளர்ச்சி வேகத்தினால் எந்த பயனுமில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சுகததாச விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஏற்கனவே பெரும் பங்கு வேலைத்திட்டங்களை செய்துள்ளது. எனினும் தற்போது பலர் அதனை மறந்து போயுள்ளனர்.

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை வழங்க முடியுமாயின் அது மிகப் பெரிய வெற்றி. நாடு பற்றி சிந்தித்தே நான் இந்த யோசனையை முன்வைக்கின்றேன்.

வேலை வாய்ப்பின்றி இருக்கும் 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும். கிராமிய மக்களை வலுப்படுத்த வேண்டும். பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை.

அரசாங்கத்திற்கு இன்னும் 18 மாதங்களே மீதமுள்ளன. ஐக்கிய தேசியக்கட்சி ஒருமித்து எடுக்கும் எந்த தீர்மானமாக இருந்தது அதனை தலை வணங்கி ஏற்றுக்கொள்வேன்.

இந்த மேதினக் கூட்டத்தை வெற்றிக்கான பயணத்தின் ஆரம்பமாக மாற்றிக் கொள்வோம் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top