Top News

மாத்தளை மாவட்டத்தை புறக்கணித்துள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர்!

Image result for ஜனாதிபதி மற்றும் பிரதமர்


கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது மாத்தளை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகாரே அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் நேற்றிரவு தன் ஆதரவாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள மட்டுமே மாத்தளை மக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன.

அதன் பிரகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றில் மாத்தளை மாவட்டம் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெற்ற அனைத்து அமைச்சரவை மாற்றங்களின் போதும் மாத்தளைக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவேயில்லை.

ஜனாதிபதியும், பிரதமரும் வேண்டும் என்றே மாத்தளை மாவட்டத்தைப் புறக்கணித்திருப்பதாக தெரிகின்றது.

அதிகாரம் இல்லாத பதவிகளைக் கொண்டு மாத்தளை மக்களுக்கு எந்தவித அபிவிருத்தியும் மேற்கொள்ள முடியாது.

மாத்தளையில் அரசாங்க தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இருந்தும் ஒரேயொரு இராஜாங்க அமைச்சுப் பதவியே வழங்கப்பட்டுள்ளது.

எனவே எமது மக்களுக்கு சேவையாற்றப் பொருத்தமான அமைச்சுப் பதவியொன்று மாவட்ட அரசியல்வாதி ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post