மேற்கு எல்லையில் அரைவாசியை பலஸ்தீனர்களுக்கு வழங்கி “அபு திஸ்” பிரதேசத்தை பலஸ்தீனின் தலைநகராக பெயரிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இதனை இஸ்ரேல்- பலஸ்தீன முரண்பாட்டுக்கான ஒரு சமாதானத் திட்டமாக முன்வைப்பதற்கும் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அபு திஸ் பிரதேசத்தை பலஸ்தீனின் தலைநகராக பெயரிட்டு, மேற்கு எல்லையை பலஸ்தீனர்களுக்கு முழுமையான அதிகாரத்துடன் வழங்கவுள்ளதாகவும் டிரம்பின் சமாதான திட்டம் குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலிலுள்ள தமது தூதரகத்தை பலஸ்தீனர்களின் பிரதேசமான ஜெரூசலத்துக்கு மாற்றி விட்டு, அதனை இஸ்ரேலின் தலைநகரம் என குறிப்பிட்டு வருகின்றார்.
ஜெரூசலம் தமக்கே உரியது எனவும் டிரம்பின் நடவடிக்கை மட்டரகமானது என பலஸ்தீனர்கள் தெரிவித்து வருகின்றனர். டிரம்பின் இந்த முறைகேடான நடவடிக்கையினால் ஓய்ந்திருந்த பதற்ற நிலைமை மேலும் உக்கிரமடைந்துள்ளது.
டிரம்பின் இந்த சமாதான திட்டத்துக்கு தாம் எந்தவகையிலும் உடன்படப் போவதில்லையென பலஸ்தீன் அரசாங்கமும் குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
Post a Comment