முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சூழ்ச்சிகளால் தோற்கடித்து தேசிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டம் என்ற போலியான திட்டங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடு பொருளாதார மற்றும் மானிட வாழ்வியல் ரீதியில் முன்னேற்றமடையும் என்று தேசிய அரசாங்கம் குறிப்பிட்டது தற்போது முழுமையடைந்துள்ளதா என்று அரசாங்கத்தினை சாடிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குனவர்தன.
தேசிய அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவ நிர்வாகத்தின் காரணமாகவே தற்போது நாடு பாரிய எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தங்களது இயலாமையினை மறைப்பதற்கு கடந்த கால அரசாங்கத்தினை குறை கூற வேண்டாம் எனஅவர் மேலும் எச்சரித்தார்.
Post a Comment