நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இராஜாங்க, பிரதி அமைச்சர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ஹிஸ்புல்லாஹ்விடம் ஏற்கனவே இருந்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சு மீளப்பெறப்பட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக நேற்று செவ்வாய்;;க்கிழமை கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது அமைச்சின் இராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Post a Comment