மைத்திரியிடம் மன்னிப்புக் கோரவில்லை!

NEWS
0
Image result for சரத்பொன்சேகா

சரத் பொன்சேகா என்ற நபர் வாழ்க்கையில் தனது பெற்றோருக்கும், மதகுருமாருக்கும் மட்டுமே தலைவணங்கி இருப்பதாகவும், அரசியல்வாதிகளுக்கு தான் ஒருபோதும் தலைவணங்கியதும் இல்லை எனவும், வணங்கப் போவதுமில்லையெனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷாக்கள் என்னை சிறையில் போடும் போதும் மன்னிப்புக் கோரினால், விடுதலை செய்வதாக கூறினர். அவர்களிடமே மன்னிப்புக் கோராத நான் அரசியல்வாதிகளிடம் சென்று தலைவணங்கி மன்னிப்புக் கோரியதாக கூறப்படும் கருத்துக்களை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் என வனசீவராசிகள் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இன்று (11) ஹொரவபொத்தானயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியிடம் தான் தலைவணங்கி மன்னிப்புக் கோரியதாக கூறப்படும் கூற்று உண்மைக்குப் புறம்பானது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top