Top News

மர்ம நோய் பற்றி இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!



தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, 12 சிறுவர்களும் ஒரு கர்ப்பிணித்தாயுமாக மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்புளுவென்ஸா வைரஸ், எடினோ வைரஸ், நியூமோகொக்கல் பக்டீறியா போன்ற வைரஸால் இந்த நோய்த் தொற்று ஏற்படுகின்றது.

மேலும், குறித்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளான மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி கராபிட்டிய வைத்தியசாலை, மாத்தறை பொது வைத்தியசாலை, எல்பிட்டிய, கம்புறுப்பிட்டிய, தங்காலை, வலஸ்முல்லை ஆகிய ஆரம்ப வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக அறியமுடிகின்றது.

இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன் பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாசக்கோளாறு உள்ளோர் மற்றும் வயோதிபர்கள் இந்த வைரஸ் தொற்று காரணாமாக இலகுவில் பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு முறைமைகளை கையாள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

குறிப்பாக பொது இடங்களில், மூக்கு, வாய் என்பவற்ரை மூடும் வகையிலான பாதுகாப்பு மூடிகளை அணிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, மூச்சுத் திணறல், சளி உள்ளிட்ட நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ள இந்த வைரஸ் தொற்று தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், பிள்ளைகளை முன்பள்ளி உள்ளிட்ட தனியார் வகுப்புகளுக்கோ அனுப்ப வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க பெற்றோரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் தடிமன், காய்ச்சல், இருமலுடன் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post