Top News

அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பாராட்டு விழா







அக்குறனை அஸ்ஹர் மத்திய கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த சா/தரப் பரீட்சையில் திறமையான சித்திகளைப் பெற்ற ( 5A க்களுக்கு மேல்) மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று 10/05/2018 வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் கல்லூரி கேற்போர் கூடத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் A.L.ANWER (SLPS1) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ASEDA – AKURANA அமைப்பின் தலைவரும், தொழிலதிபருமான ALHAJ.T.L.M.NAWASH B.SC.(Hons), DIP (Stat) அவர்களும், கௌரவ அதிதியாக விசேட வைத்திய நிபுணர் M.A.M.FAIZAL MBBS,DCH,MD(PAEDIATRICS) அவர்களும், விசேட அதிதியாக கட்டுகஸ்தோட்ட வலயக் கல்விப் பணிமனையின் தமிழ்ப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ASH SHEIK I. HASHIM (SLEAS) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் 9A சித்தி பெற்ற 11 மாணவிகள் உற்பட 36 மாணவ மாணவிகள் சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள், பணப்பரிசில்கள், பதக்கங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் கடந்த இரண்டு வருடங்களாக க.பொ.த சா/தர வகுப்புக்களுக்கு பொறுப்பாக இருந்து சிறந்த பெறுபேறுகள் வரக் காரணமான பகுதித் தலைவர் A.L.M.NOUFY (B.A)(PGDE) உற்பட அம்மாணவர்களுக்கு கற்பித்த ஏனைய ஆசிரிய ஆசிரியைகளும் நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்விலே பாடசாலையின் பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், கல்வி சாரா ஊழியர்கள், இவ்வருடம் க.பொ.த சா/தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ மாணவிகள் உற்பட பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கு அஸ்ஹர் பழைய மாணவர் ஒன்றியம் (OAU), அஸ்ஹர் பாடசாலை அபிவிருத்திக் குழு (SDC) என்பன பூரண அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தகவல்
ஏற்பாட்டு குழு
அஸ்ஹர் மத்திய கல்லூரி

Post a Comment

Previous Post Next Post