கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் கட்சி காரியாலய அங்குரார்ப்பண வைபவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கட்சி பணிகளை ஆரம்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது.
பெரும்பான்மை கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் அந்தப் பிரதேசத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கும் போது, எமக்கு அழைப்பு வருகின்றதென்றால் அதன் அர்த்தம், மக்கள் எமது கட்சியை அங்கீகரித்து, கட்சியின் சேவைகளை விரும்புகிறார்கள் என்றே கருத வேண்டும்.
அதற்காக அவசர அவசரமாக கட்சிக் கிளைகளை அமைத்து, மக்களை இடையில் கைவிடுவது எமது நோக்கமல்ல.
கண்டியில் நமது சமூகத்தின் மீது அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை.
கண்டி கலவரம் இலங்கை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக மாறி இருக்கின்றது. இதனால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவங்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்குமென நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment