எஸ்.எம் இர்சாத்
அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் பெருநாளை முன்னிட்டு நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்வது வழமை, அக்கரைப்பற்று மாநகர சபையை தேசிய காங்கிரஸ் கைப்பற்ற முன்னர் இருந்த இடைவெளியில் ஆணையாளர் ஆட்சியில் இருந்த பொழுது இந்த வியாபரம் இடம்பெற்றது ஆனால் அதாஉல்லா சக்கி ஆட்சியிலிருக்கும் இக்காலப்பபகுதியில் அவர்களை அனுமதிக்காதது வேதனையளிப்பதக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் நுஹ்மான் தெரவித்துள்ளார்.
குறித்த வியாபரிகளை அட்டாளைச் சேனை பிரதேச சபைக்குள் வியாபரம் செய்ய அனுமதி பெற்றுக்கொடுத்துவிட்டு கருத்துக் கூறும் போதே இதனை தெரிவித்தார்,
வியாபாரிகள் அனைவரும் ஏழைகள் பிழைப்பு தேடி நமதுாருக்கு வந்தவர்கள் அவர்களை வெளியேற்றுவது வேதனையான விடயம், அவர்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் வியாபாரம் செய்தனர், அவர்களிடம் பொருட்களை ஏழைகள் பலர் கொள்வனவு செய்தனர், ஆனால் அதற்கும் அதாஉல்லா அரசு முட்டுக்கட்டையாக இருந்தது, அவர்கள் அவர்களின் வாழ்வின் முன்னைய ஏழ்மை நிலையை மறந்து செயற்படுவதாகவே நான் உணர்கிறேன் என்றார்.
Post a Comment