கோறளைப்பற்று
மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை மஸ்ஜிதுல்
அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,
காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் நிதி
ஒதுக்கீட்டிலிருந்து ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை
கையளிக்கும் நிகழ்வு அன்மையில் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்இ
காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
கலந்துகொண்டு ஒலி பெருக்கி சாதனங்களை நிருவாக சபையினரிடம்
கையளித்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரின் ஊடகச்
செயலாளரும்இ கல்குடாத் தொகுதி இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி அவர்களும்
கலந்துகொண்டார்.
இப்பள்ளிவாசலுக்கு
மிகவும் அத்தியாவசிய தேவைப்பாடாக இருந்த ஒலி பெருக்கி சாதனங்களை
பெற்றுத்தந்தமைக்காக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,
காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
அவர்களுக்கு பள்ளிவாசல் நிருவாக சபையினர் மற்றும் மஹல்லாவாசிகள் தங்களது
நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
கடந்த
வருடம் இப்பள்ளிவாசலுக்கு எதேர்ச்சியாக தொழுகைக்குச் சென்றபோது
இப்பள்ளிவாசல் பேஸ் இமாம் மற்றும் நிருவாக சபையினரால் இவ்வேண்டுகோள்
விடுக்கப்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தனது நிதி
ஒதுக்கீட்டிலிருந்து இவ்வருடம் ஒலி பெருக்கி சாதனங்களை
பெற்றுக்கொடுத்துள்ளார்.
இப்புனித
மாதமான ரமழான் மாதத்தில் நம் அனைவரினதும் பாவங்களையும் மண்ணித்து நாம்
ஏனையவர்களுக்கு வழங்கும் உதவிகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக…
Post a Comment