ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைன் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி மொஹமட் அஸீஸ் ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கை தொடர்பான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் தெரிவிக்கின்றது.
நாட்டின் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினப் பாதுகாப்புத் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் அல் ஹூசைனிடம் இலங்கை வதிவிடப் பிரதிநிதி மொஹமட் அசீஸ் தௌிவுபடுத்தியுள்ளார்,
இது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்திடம் தௌிவுபடுத்தியுள்ளதாக இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் கூறுகின்றது,
Post a Comment