Top News

றமானுக்கு வந்த பேரீச்சம்பழத்தில் உல்டா; ஏழைகளின் வயிற்றுடன் முக்கியஸ்தர்கள் விளையாட்டு?


சிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர் றிம்ஜான்

வருடா வருடம் றமழானுக்காக பேரீச்சம் பழங்களை சவூதி அரசு வழங்குவது வழமை, ஏனைய நாட்டில் விற்பனையாகும் பழங்களை விட இது தரத்தில் கூடியதாக இருக்கும், மஹிந்த அரசில் இருந்தபோதும் நிறைவான பழங்கள் வழங்கப்பட்டிருந்தது, ஆனால் இம்முறை இலங்கைக்கு பழங்கள் வருவதில் தாமதமும், அசமந்த போக்கும் இருந்தது.

பள்ளிவாசல்களுக்கு றமழான் பிறை 10ற்கு முன்னர் வந்து சேரும் பேரீச்சம் பழம், இம்முறை தரத்தில் குறைந்த அளிவல் குறைந்த பழங்களே ஒரு சில பள்ளிவாசல்களுக்கு வந்து சேர்ந்துள்ளது. இது தொடர்பில் சிலோன் சவூதியிலுள்ள இலங்கைக்கு பொறுப்பான அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது தரமான பேரீச்சம் பழங்களே சவூதி வழங்கும் அதில் எந்தவித சந்தேககமும் இல்லை, இது தொடர்பில் அங்குள்ள அதிகாரிகளை கேட்கவும், இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரை தொடர்புகொள்ள முயற்சித்த போது அழைப்பை எடுக்கவில்லை.


பேரீச்சம் பழம் தரமாக வந்த போதும் அது தனியார கம்பனிக்கு கைமாறப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது, இந்த தகவலை முற்றாக எதிர்ப்பின் இது தொடர்பில் குறித்த அமைச்சும் மற்றும் திணைக்கள் பேரீச்சம் பழத்தின் தரத்தை உறுதி செய்வதோடு மக்கள் மனங்களையும் குளிரவைக்க வேண்டும். (சதொச மூலமே இம்முறை பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் வழங்கப்படுகிறது) 

இதன் உண்மைத்தன்மை மற்றும் முக்கிய விடயங்கள் குறித்து மிகவும் அவதானத்துடன் சிலோன் முஸ்லிம், மேலதிக விபரங்கள் ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

Post a Comment

Previous Post Next Post