Top News

அஸ்ஸாம் அமீனுக்கு குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பு!



ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 
ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த புதிய கொள்கை முறைகள் தொடர்பான பதிவிற்கு அஸ்ஸாம் அமீன், “நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆனால் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்! செயலில் காட்டுங்கள்” என்று ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் விதத்தில் பதிவிட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.


அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ டுவிட்டர் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.
தற்போது நிலைமை சுமுகமான முறையில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 
இருந்த போதிலும் சர்ச்சைக்குரிய டுவிட்டை அழிப்பதற்கு முன்னர் அது தொடர்பாக விசாரணை செய்ய செய்தியாளர் அஸ்ஸாம் அமீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post