வரிச் சட்டத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றமானது சீட்டு கட்டையில் சீட்டுக்களை கலைப்பது போன்றதேயாகும்.
இதனால் அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை விட்டு விலகிச் செல்கின்றது.
அரசாங்கத்தினால் மக்கள் துயரங்களை அனுபவிக்கின்றார்கள். அரசாங்கம் செய்யும் காரியங்கள் பற்றி அரசாங்கத்திற்கு தெரியவில்லை.
பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி அரசாங்கத்திற்கு தெரியும்.
நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்லும் அரசாங்கத்தினால் தாங்கள் செய்தோம் என்று கூறுவதற்கு எதுவுமில்லை.
வரிச் சட்டத்திற்கு எதிராக நாம் வீதியில் இறங்கும் போது அரசாங்கத்திற்கு கண்களில் நட்சத்திரங்கள் தென்படும்.
மக்கள் இப்போது எம்முடன் இருக்கின்றார்கள்.
கடந்த ஆண்டு மே தினக் கூட்டத்தின் போது காலி முகத் திடலில் அணி திரண்ட மக்களை விடவும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எதிர்வரும் 7ம் திகதி அணி திரள்வார்கள் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment