கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பெரியாற்று முனை வட்டாரம் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படும் என நேற்று(15)மாலை கிண்ணியா நகர சபையில் நடைபெற்ற சபையின் இரண்டாம் அமர்வின் போது பெரியாற்று முனை வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் தனது பிரேரனைகளை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கடந்த காலங்களில் எமது வட்டாரத்தை உள்ளடக்கிய பெரியாற்று முனை,பெரிய கிண்ணியா,எகுத்தார் நகர் போன்ற பகுதிகள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டன ஆனாலும் இவ்வாறான குறைகள் துரித கதியில் தீர்க்கப்பட்டு அபிவிருத்திகள் இடம் பெறும் குறிப்பாக உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட மக்களுடைய பிரச்சினைகளான வீதிப் போக்குவரத்து என்பன தீர்க்கப்படும் .
எனது பிரேரனைகளாக எகுத்தார் நகரில் அமைந்துள்ள பல்தேவைக் கட்டிடத்தில்(Multi purpose Building) பொது நூலகம் அமைத்தல்,
ரமழான் மாதத்திற்கான கடைத் தொகுதிகளை நகர சபை மைதானத்தை முன்னிலைப்படுத்தி ஏற்பாடு செய்தல், புளூவேர்ட்ஸ் மைதானத்தை புனரமைப்புச் செய்தல், பெரியபள்ளி வீதியில் உள்ள மிகுதி 50 மீற்றருக்கான கொங்ரீட் இடல், அலி வாடியில் இடை நிறுத்தப்பட்ட கடலரிப்பு தடுப்புச் சுவரை தொடர்ச்சியாக குறிஞ்சாக்கேணி பாலம் வரை கொண்டு செல்லல்,
பெரிய கிண்ணியாவில்(பெரியாற்று முனை,எகுத்தார் நகர்) வாராந்த சந்தையை ஏற்பாடு செய்தல், போன்ற பிரேரனைகளை முன்வைக்கிறேன் இவ்வாறான பல திட்டங்களை எதிர்காலத்தில் முன்வைப்பதோடு அபிவிருத்திகளும் இடம் பெறும் மக்களுடைய பிரச்சினைகளுக்கான உள்ளூர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வீதியோரங்களில் வீதி விளக்குகள் பொறுத்துதல்,வடிகான்களை நீர்தேங்கா வண்ணம் சுத்தம் செய்வது தொடக்கம் பல சேவைகள் எமது பகுதிகளுக்குள் இடம் பெற்றும் தற்போதும் இடம் பெறக் காத்திருக்கின்றன .மாரி காலங்களில் நீர் தேங்கி நிற்கா வண்ணம் பாதைகள் சீர் செய்யப்படும் மற்றும் இளைஞர் யுவதிகளின் நலன் கருதி விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்த விளையாட்டு மைதானங்கள் நவீன முறையில் செய்து கொடுப்பதற்கான திட்ட முன்மொழிவுகளையும் பிரகடனப்படுத்தவும் இருக்கிறோம் பெண்களுக்கான தனியானதொரு மைதானத்தை அமைத்து உடற்பயிற்சி மூலமான தங்களது பொழுது போக்குகளுக்கான திட்டங்களும் விசேடமாக கவனத்திற் கொண்டு நடை முறைப்படுத்த இருக்கிறோம் என்றார்.

Post a Comment