ஹஸ்பர் ஏ ஹலீம்
சட்டத்தரணி பைசர் நேற்று (02 ) கிழக்கு மாகாண சபையின் பிரதமச் செயலாளர அலுவலகத்தில் சட்ட அதிகாரியாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த நியமனம் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் 27.7.2017ம் திகதி நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட இவர் முகம்மது லத்தீப் மற்றும் மர்லியா நோனா தம்பதிகளின் கடைசிப் புதல்வர் ஆவார்.
ஆரம்பக்கல்வியை மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியிலும் இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியினை திருகோணமலை ஶ்ரீ.கோணேஸ்வரா இந்துக்கல்லூரியிலும் பூர்த்திசெய்துள்ளார்.
இவர் விஞ்ஞானத்துறை மற்றும் சட்டத்துறை பட்டதாரியும் ஆவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவக் துறையில் பட்டப்பின் படிப்பினையும் பூர்த்தி செய்து அதேதுறையில் முதுமானி கற்கையினை பூர்த்தி செய்து ஆய்வு நிலை மாணவராக இருந்துவருகின்றார்.
பிரபல சமூக செயற்பாட்டாளரான இவர் மூதூர் மஜ்லிஸூஸ் ஷூறா சபையின் பொதுச் செயலாளராகவும் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment